கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2025-03-09 22:13 IST   |   Update On 2025-03-09 22:13:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.
  • இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

புதுடெல்லி:

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடபாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு அசாதாரணமான ஆட்டம் மற்றும் ஒரு அசாதாரணமான முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காக எங்கள் கிரிக்கெட் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம். அவர்கள் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமான ஒட்டுமொத்த அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News