சாம்பியன்ஸ் டிராபி: பிலிப்சின் அபார கேட்சால் கில் அவுட்.. பிரேஸ்வெல் சூழலில் சிக்கிய கோலி
- 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.
சாட்னர் பந்துவீச்சில் 31 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டி இழப்பிற்கு இந்திய அணி 115 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 70 ரன்னிலும் ஷ்ரேயஸ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.