கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்
- இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.
- சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீரர்களின் உருவப்படங்களுக்க்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.