null
கிரிக்கெட், பேட்டிங் மீதான காதல் இருக்கும் வரை... வெற்றி ரகசியத்தை உடைத்த விராட் கோலி
- நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன்.
- கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அபாரமாக விளையாடினார். கடினமான துபாய் ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்ஸ் இல்லாமல் ஒரு ரன், இரண்டு ரன்களாக ஓடி ரன்கள் குவித்தார்.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது குறித்து விராட் கோலி கூறியதாவது:-
நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன். கிரிக்கெட்டையும், பேட்டிங்கையும் விரும்புகிற வரை மற்ற அனைத்து விசயங்களையும் அதுவாகவே பார்த்துக்கொள்ளும்.
தலைக்குணிவை ஏற்படுத்தாத மோசமான நிலைக்கு தள்ளப்படாததற்கு கடவுளுக்கு நன்றி, அணிக்கு என்ன தேவையோ?. அதை நோக்கி உழைத்தால் இதுபோன்ற முடிவுகள் அடிக்கடி கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த நிலையில் இந்த போட்டிகளுக்காக தயாராக வேண்டும், உற்சாகம் பெற வேபண்டும், அதனுடன் களத்தில் இறங்க வேண்டும், அணிக்காக என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும், கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான்.
இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து வெளிப்படும்போது நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். அணி வெற்றிக்கான நிலையை தொடும்போது அது சிறந்த உணர்வாக இருக்கும்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.