ஐ.பி.எல்.

ஐபிஎல் 2025: வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அணியக்கூடாது - புதிய கட்டுப்பாடுகள் விதித்த பிசிசிஐ

Published On 2025-03-06 17:43 IST   |   Update On 2025-03-06 17:43:00 IST
  • ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என பிசிசிஐ கட்டுப்பாடு விதிப்பு

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.

இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் விதிக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பயிற்சிக்கு செல்லும்போது அணியினர் செல்லும் பேருந்துகளில் தான் வீரர்கள் பயணம் சேயாய் வேண்டும் என்றும் பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என்று பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொது அங்கீகார அட்டையையே வீரர்கள் கொண்டு வர மறந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, போட்டி முடிந்த பின்பு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது என்றும் இதனை முதல்முறை மீறினால் எச்சரிக்கை விடுக்கப்படும் 2 ஆவது முறையாக மீறினால் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News