நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்
- 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும், இந்த புதிய ஜெர்சியை விலை கொடுத்து வாங்குவதற்கான இணையதளத்தின் லிங்கின் அந்த அணி பகிர்ந்துள்ளது.