இந்திய அணிக்கு கேப்டனாகாதது ஏன்? விளக்கம் அளித்த அஸ்வின்
- உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன்.
- உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் டிரா ஆனது.
இந்த போட்டி முடிந்த பிறகு அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அவர் 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாகாதது ஏன் என்பது குறித்து தமிழக வீரர் அஸ்வின் விளக்க அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகாததற்கே ENGINEERINGதான் காரணம். உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன்.
உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன். அதுபோலதான் 'நீ இந்திய அணிக்கு கேப்டன் ஆகலாம்' என நிறைய பேர் என்னிடம் சொன்னதால்தான் நான் தூங்கிவிட்டேன்.
என அஸ்வின் கூறினார்.