கிரிக்கெட் (Cricket)

பிரதிகா ராவல், தேஜல் ஹசாப்னிஸ் அசத்தல்- 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

Published On 2025-01-10 18:33 IST   |   Update On 2025-01-10 18:33:00 IST
  • இந்திய தரப்பில் பிரதிகா ராவல், தேஜல் ஹசாப்னிஸ் அரை சதம் விளாசினர்.
  • அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.

அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். தொடக்க இருந்தே மந்தனா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 20, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 என வெளியேறினர்.

இதனை தொடர்ந்து பிரதிகா மற்றும் தேஜல் ஹசாப்னிஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். பிரதிகா சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 34.3 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tags:    

Similar News