கிரிக்கெட் (Cricket)

சேப்பாக்கத்தில் இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டி: 12-ந் தேதி டிக்கெட் விற்பனை

Published On 2025-01-10 19:09 IST   |   Update On 2025-01-10 19:09:00 IST
  • இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 25-ந் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
  • இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.

அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. 2-வது டி20 போட்டி சென்னையில் வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25-ந் தேதி நடைபெறும் போட்டி நடைபெற உள்ள நிலையில் வருகிற 12-ந் தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

டி20 கிரிக்கெட் போட்டிக்கு ரூ.1500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News