கலாய்த்த ஆஸி, ரசிகர்கள்.. வேற லெவலில் பதிலடி கொடுத்த கோலி.. வைரல் வீடியோ
- இளம் வீரரை சீண்டிய விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர்.
- விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்தனர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இந்நிலையில் இளம் வீரரை சீண்டிய விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி, அவர் சாப்பிட்டு கொண்டிருந்த சூயிங்கமத்தை ரசிகர்களை பார்த்து துப்பினார்.
இந்த வீடியோவுக்கு இந்திய ரசிகர் ஒருவர் தீம் மியூசிக் வைத்து எடிட்டி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல இன்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் விராட் கோலி 36 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போதும் ரசிகர்கள் கலாய்த்தனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து ரசிகர்களை பார்த்து முறைத்து கொண்டார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.