கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி

Published On 2024-12-27 10:54 GMT   |   Update On 2024-12-27 10:54 GMT
  • 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஆட்டநாயகி விருதை தீப்தி சர்மாவும், தொடர் நாயகியாக ரேணுகா தாகூரும் தட்டி சென்றனர்.

மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து ஷெமைன் காம்பெல்லே - சினெல்லே ஹென்றி ஜோடி அணியை மீட்டனர். 46 ரன்கள் எடுத்த போது காம்பெல்லே அவுட் ஆனார். அடுத்து வந்த ஜைதா ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி அரை சதம் விளாசினார். அவர் 61 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 4 ரன்னிலும் ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 18, கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 என வெளியேறினார்.

இறுதியில் தீப்தி சர்மா (39) மற்றும் ரிச்சா கோஷ் (23) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 28.2 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

Tags:    

Similar News