கிரிக்கெட் (Cricket)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 3 பேர் சதம்: 586 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே ஆல் அவுட்
- ஜிம்பாப்வே அணியில் வில்லியம்ஸ், எர்வின், பென்னட் ஆகியோர் சதம் விளாசினர்.
- ஜிம்பாப்வே அணியின் அதிகபட்ச ஸ்கோர் (586) இதுவாகும்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 145 ரன்னும், எர்வின் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வில்லியம்ஸ் 154 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய எர்வின் 104 ரன்னில் வெளியேறினார். இருவர் சதத்தை தொடர்ந்து பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 586 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியின் அதிக ஸ்கோர் ஆகும். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஏஎம் கசன்பர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.