கிரிக்கெட் (Cricket)

நாளை காலை போராடுவோம்: நம்பிக்கை தெரிவித்த வாஷிங்டன் சுந்தர்

Published On 2024-12-27 10:44 GMT   |   Update On 2024-12-27 10:44 GMT
  • இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. ஏராளமான ஓவர்கள் உள்ளன.
  • ஆகவே, மிகவும் கடினமான வகையில் அணிக்கு தேவையானதை செய்ய முயற்சிப்போம்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்களில் குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 51 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

இந்த ஜோடி 102 ரன்கள் குவித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். 41-வது ஓவரின் கடைசி பந்தில் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 43-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 164 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. இன்னும் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

தற்போது ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மட்டும் வெளியில் உள்ளனர்.

இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மூன்று பிரிவுகளிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) இந்திய அணி என்னிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்ப்பதை ஆச்சர்யமாக பார்க்கவில்லை. அது எனக்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை செய்வது அணிக்கு முக்கியமானது. எந்தவொரு சூழ்நிலை என்று கவலை இல்லை. களம் இறங்கி முழு எனர்ஜியுடன் அணிக்காக விளையாட வேண்டும்.

நாங்கள் சிறந்த ரன்களை குவிக்கும் அளவில் நல்ல பொசிசனில் இருந்தோம். ஆனால், நாளை காலை வந்து தொடர்ந்து போராடுவோம்.

வீரர்கள் அறையில் எனர்ஜி மிகவும் சிறப்பாக உள்ளது. நாங்கள் அனைவரும் பாசிட்டிவாக உள்ளோம். இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. ஏராளமான ஓவர்கள் உள்ளன. ஆகவே, மிகவும் கடினமான வகையில் அணிக்கு தேவையானதை செய்ய முயற்சிப்போம்.

நேற்று ஆடுகளம் சற்று சாஃப்ட் ஆக இருந்தது. ஆள் முழுவதும் சூரியன் வெளியே வராமல் மேக மூட்டமாக காணப்பட்டது. இன்று சிறப்பாக பேட்டிங் செய்யும் வகையில் ஆடுகளம் மாறியது. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் என கருதுகிறேன். ஆடகளம் மிகப்பெரிய அளவில் மாறாது. பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும்.

Tags:    

Similar News