கிரிக்கெட் (Cricket)

Video: பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் கொண்டாடிய நிதிஷ் குமார்

Published On 2024-12-28 03:31 GMT   |   Update On 2024-12-28 03:31 GMT
  • நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
  • சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மெல்போர்ன்:

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.

சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.

தற்போதுவரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 69 ரன்களிலும் வாசிங்டன் சுந்தர் 34 ரன்களிலும் களத்தில் ஆடி வருகின்றனர்.

Tags:    

Similar News