கிரிக்கெட் (Cricket)

நிதிஷ் ரெட்டி சதத்தால் கண்ணீர் சிந்திய ரவி சாஸ்திரி.. வைரல் வீடியோ

Published On 2024-12-28 15:28 GMT   |   Update On 2024-12-28 15:28 GMT
  • நிதிஷ்குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
  • தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி 21 வயதில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தார்.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 164/5 என்ற மோசமான நிலையில் இருந்தது.

இதனையடுத்து நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டு எடுத்து வந்தனர். சுந்தர் 50 ரன்னில் அவுட்டாகி வெளியேறினாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி 21 வயதில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தார்.

நிதிஷ்குமார் சதத்தை பார்த்த அவருடைய தந்தை ஆனந்த கண்ணீர் சிந்திய அதேநேரத்தில், வர்ணனைபெட்டியில் இருந்த ரவிசாஸ்திரியின் கண்களும் கண்ணீரில் மூழ்கியிருந்தன.

நிதிஷ் ரெட்டி சதமடித்த போது இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மற்றும் டிவி தொகுப்பாளர் ஜதின் சப்ரு ஆகியோர் வர்ணனை பெட்டியில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ரவி சாஸ்திரியின் கண்கள் ஈரமாகின, அந்த தருணம் குறித்து பேசிய ரவிசாஸ்திரி "இந்த நேரத்தில் நிதிஷின் தந்தை மட்டுமல்ல, போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து இந்திய ரசிகர்களுன் கண்களில் கண்ணீர் இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News