கிரிக்கெட் (Cricket)

இந்தியாவை வீழ்த்தி ஜூனியர் ஆசிய கோப்பையை வங்கதேசம் கைப்பற்றியது

Published On 2024-12-08 12:24 GMT   |   Update On 2024-12-08 12:24 GMT
  • முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது
  • 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்கள் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ரிசான் ஹொசைன் 47 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதன்மூலம் 2 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வங்கதேசம் கைப்பற்றியது.

கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய வங்கதேச அணி தொடர்ச்சியாக இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Tags:    

Similar News