கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த பென் சியர்ஸ் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் இணைந்துள்ளார்.