சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால், வெற்றியுடன் தொடரை தொடங்க இரு அணிகளும் மும்முரம் காட்டுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் பட்டேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது சமி, குல்தீப் யாதவ்.