கிரிக்கெட் (Cricket)

மைதானத்தில் குழந்தையை பெற்றெடுத்த ரசிகை- அறிவிப்பு பலகையில் வாழ்த்து

Published On 2024-12-23 12:44 GMT   |   Update On 2024-12-23 12:44 GMT
  • தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
  • இந்த போட்டியை காண வந்த கர்ப்பிணி ரசிகைக்கு குழந்தை பிறந்தது.

ஜோகனஸ்பெர்க்:

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3-வது போட்டியை காண வந்த கர்ப்பிணி ரசிகைக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே மைதானத்தில் இருந்த மருத்துவ குழு உதவியுடன் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்த பிறந்தது. இதனையடுத்து அங்குள்ள விளம்பரப் பலகையில் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News