கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் 'பிளாக்' செய்ததாக கூறிய பிரபல பாடகர்

Published On 2024-12-23 15:03 GMT   |   Update On 2024-12-23 15:03 GMT
  • கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக பிரபல பாடகர் ராகுல் வைத்யா தெரிவித்தார்.
  • கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக பிரபல பாடகர் ராகுல் வைத்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய பாடகர் ராகுல் வைத்யா, இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி எதற்காக இன்ஸ்டாகிராமில் என்னை பிளாக் செய்தார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. எப்போதாவது ஏதாவது நடந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை.

ராகுல் வைத்யா பிரபலமான பாடல் போட்டியான இந்தியன் ஐடலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தும் , இந்தி பிக் பாஸ் சீசன் 14 இல் போட்டியாளராக பங்கேற்றும் மக்களிடையே பிரபலமானவர்.

அவர் 2021 இல் தொலைக்காட்சி நட்சத்திரமான திஷா பர்மரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News