கிரிக்கெட் (Cricket)
பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்திய அணியில் இணைந்த இளம் ஆல் ரவுண்டர்
- ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
- அஸ்வினுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் பாதியில் தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவருக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 41.21 சராசரியுடன் 2523 ரன்கள் விளாசியுள்ளார். பந்து வீச்சில் 101 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.