கிரிக்கெட் (Cricket)

முதல் முறையாக செருப்பு எமோஜி இல்லாமல் டுவிட்- யுவராஜ் வாழ்த்து குறித்து அபிஷேக் சர்மா கிண்டல்

Published On 2025-02-03 21:49 IST   |   Update On 2025-02-03 21:49:00 IST
  • செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன்.
  • ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு அவரது ஆலோசகரான யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

அதில், "நன்றாக விளையாடினீர்கள் அபிஷேக் ஷர்மா. உங்களிடம் இந்த ஆட்டத்தை தான் நான் பார்க்க விரும்பினேன். உங்களுடைய சதத்திற்காக பெருமையடைகிறேன்" என்று பாராட்டினார். யுவராஜ் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் அபிஷேக் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அபிஷேக் சர்மா பதிலளித்தது பின்வருமாறு:-

செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார். அதற்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். 3 வருடத்திற்கு முன்பாக அவருடன் பயிற்சிகளை துவங்கிய போது ஒரு வீரராக உங்கள் மீது எப்போதும் சந்தேகம் இருப்பது இயற்கை என்று கூறினார்.

இருப்பினும் உங்களால் இந்தியாவுக்காக விளையாடி நன்றாக செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று என்னிடம் சொன்னார். லாக் டவுன் சமயங்களில் குறுகிய காலத்தை பார்க்காதீர்கள் நீண்ட கால திட்டத்திற்காக உங்களை நான் தயார்படுத்துகிறேன் என்று யுவ்ராஜ் என்னிடம் சொன்னார். அன்று அவர் கொடுத்த பயிற்சிகள் இன்று ஒன்றாக சேர்ந்து எனக்கு வருவதில் மகிழ்ச்சி.

என்று அபிஷேக் கூறினார்.

Tags:    

Similar News