ஐசிசி டி20 தரவரிசை: முன்னேற்றம் கண்ட ஹரிஸ் ராஃப்.. பின்னுக்கு தள்ளப்பட்ட பாபர் அசாம், அப்ரிடி
- ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.
பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.