null
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டனாக களமிறங்கும் SKY
- ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
- 23-ந் தேதி சென்னை- மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
சென்னை:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் கேப்டனாக செயல்படுவார்.
கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.