ஐ.பி.எல்.

ஐபிஎல் 2025: எந்த அணி கோப்பையை வெல்லும்- மைக்கெல் கிளார்க் கணிப்பு

Published On 2025-03-19 16:24 IST   |   Update On 2025-03-19 16:24:00 IST
  • கிளார்க், கணித்த அணியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் இல்லை.
  • கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

18-வது ஐபிஎல் சீசன் தொடரானது வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப்களுக்கு முன்னேறும். இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் கணித்த அணியில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் இல்லாதது அவர்களது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News