சுப்மன் கில், ரோகித் சர்மா அவுட்: இந்தியா 16 ஓவரில் 82/2
- இந்திய அணி வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
- இந்திய அணி முதல் 16 ஓவரில் 82 ரன்களை எடுத்துள்ளது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.
அணியின் எண்ணிக்கை 30 ஆக இருந்தபோது சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 28 ரன்னில் வெளியேறினார்.
விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து பொறுப்புடன் ஆடினார்.
இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.