ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது இந்தியா
- இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த தோல்விக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா பழி தீர்த்தது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு
முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியை இந்தியா பழி தீர்த்துள்ளது. அரை சதம் கடந்து 84 ரன் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.