இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: ஒரு மாற்றத்துடன் இங்கிலாந்து அணி அறிவிப்பு
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல் டி20 போட்டியில் முதல் ஓவரிலேயே ரன்களை வாரி வழங்கிய கஸ் அட்கின்சனுக்கு இப்போட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதவிர்த்து இப்போட்டியின் 12-வது வீரராக ஜேமி ஸ்மித் பெயர் இடம்பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி:-
பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட், ஜேமி ஸ்மித்(12ஆவது வீரர்).