கிரிக்கெட் (Cricket)

50 ஆண்டு பொன்விழா: வான்கடே மைதானத்தில் நிகழ்த்திய கின்னஸ் சாதனை

Published On 2025-01-24 02:46 IST   |   Update On 2025-01-24 02:46:00 IST
  • மும்பையில் உள்ள வான்கடே மைதானம் 1974-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
  • இதன் 50வது ஆண்டு விழா மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கொண்டாடப்படுகிறது.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.

அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM'என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது.

தவிர FIFTYக்கு 1,902, YEARSக்கு 2,831 OFக்கு 1,066, WANKHEDEக்கு 4,990, STADIUM 3,672 பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த மைதானத்தில் 2011-ம் ஆண்டில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை (50 ஓவர்) வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News