கிரிக்கெட் (Cricket)

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற 2015 உலகக் கோப்பையை வென்ற ஆஸி, கேப்டன் மைக்கேல் கிளார்க்

Published On 2025-01-23 21:47 IST   |   Update On 2025-01-23 21:47:00 IST
  • சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர்.
  • 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64-வது நபராக ஆஸ்திரேலியா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் விழா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், "8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார். சிட்னியில் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56-க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க். 43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5 என ஆஷஸ் தொடரினையும் 2015-ல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.

Tags:    

Similar News