கிரிக்கெட் (Cricket)
பிக்பாஷ் லீக் தொடர்: சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியது சிட்னி தண்டர்ஸ்
- முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 114 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த நாக் அவுட் சுற்று போட்டியில் சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மின்னல் காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. ஆலிவர் டேவிஸ் 36 ரன்னும், மேத்யூ கைக்ஸ் 28 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி சேலஞ்சர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.