கிரிக்கெட் (Cricket)
null

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் பேரை ஈடுபடுத்தும் பாகிஸ்தான்

Published On 2025-01-22 20:34 IST   |   Update On 2025-01-22 20:49:00 IST
  • பஞ்சாப் அரசு லாகூர் மற்றும் ராவல்பிண்டி போட்டிகளுக்காக 12,500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கிறது.
  • கராச்சியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. லாகூர் மற்றும் ராவல் பிண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் இடங்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான பணிகளை பஞ்சாப் மாகாண அரசு தொடங்கியுள்ளது.

போட்டிகள் மற்றும் பங்கேற்கும் அணிகளுக்காக பஞ்சாப் அரசு 12,500 காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கிறது. சிறப்பு கமாண்டர்கள் உள்பட 7,600 போலீஸ்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் லாகூரில் நடைபெறும் போட்டிகளுக்காக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

411 சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட 4,500 போலீசார் ராவல்பிண்டியில் பாதுகாப்பை மேற்பார்வையிட இருக்கிறார்கள். தேவைப்பட்டால் ராணுவ உதவியுடன் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு மூலம் போட்டிகள் கண்காணிக்கப்படும். போலீஸ் உடன் துணை ராணுவ ரேங்கில் உள்ள அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கராச்சியில் நடைபெறும் போட்டிகளுக்காக குறைந்தபட்சம் 5 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்கள் என சிந்து காவல்துறைக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னதாக 2023-ல் ஆசிய கோப்பை தொடரை நடத்தியது. ஆனால் நான்கு போடடிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற்றது. மற்ற போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் 11 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். இந்தியா தகுதி பெறுவது பொறுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவது முடிவு செய்யப்படும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுடன் லாகூர் மற்றும் கராச்சியில் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

கராச்சியில் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க போட்டி நடைபெறுகிறது. முத்தரப்பு தொடரில் பிப்ரவரி 12 மற்றும் 14-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் போட்டி நடைபெற இருக்கிறது.

லாகூர் மற்றும் ராவல்பிண்டி பஞ்சாப் மாகாண எல்லையிலும், கராச்சி சிந்து மாகாண எல்லையிலும் உள்ளன. இந்த பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.

Tags:    

Similar News