கிரிக்கெட் (Cricket)
null
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
- இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.
- இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் ஆவல்
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கவுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்
இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைத்தளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.