கிரிக்கெட் (Cricket)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்.. சாஹல் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்

Published On 2025-01-22 21:02 IST   |   Update On 2025-01-22 21:02:00 IST
  • இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • இப்போட்டியில் பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கியது

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்தார்.

61 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 80 போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News