கிரிக்கெட் (Cricket)

யுஸ்வேந்திர சாஹலிடன் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங்- வைரல் வீடியோ

Published On 2025-01-23 19:42 IST   |   Update On 2025-01-23 19:42:00 IST
  • இந்தியா- இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  • அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:-

யுஸ்வேந்திர சாஹலின் ஆல் டைம் ரெக்கார்டை உடைத்ததற்காக மன்னிப்பு (காதுகளின் மீது கை வைத்தவாறு மன்னிப்பு கேட்டு சைகை செய்தார்) கேட்டுக் கொள்கிறேன்.

இது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு தருணம். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. நாட்டுக்காக இன்னும் நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்து என்றும் நன்றி உள்ளனாக இருப்பேன்.

என அர்ஷ்தீப் சிங் கூறினார்.

Tags:    

Similar News