IPL 2025: தொடக்க விழாவில் பங்கேற்கும் ஸ்ரேயா கோஷல், திஷா பதானி?
- ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- தொடக்க நாளில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்த தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.