ஐ.பி.எல்.
VIDEO: ஐபிஎல் தொடருக்கான பயிற்சியின்போது நடனமாடிய விராட் கோலி
- அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆர்சிபி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளதால், அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு, ஆர்சிபி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின்போது விராட் கோலி ஜாலியாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.