ஐ.பி.எல்.

அன்று வந்ததும் அதே நிலா.. இன்று வந்ததும் அதே நிலா.. லக்னோ வெளியிட்ட வீடியோ வைரல்

Published On 2025-03-15 17:08 IST   |   Update On 2025-03-15 17:08:00 IST
  • 2005-ம் ஆண்டில் இந்தியா போட்டியின் போது ஜாகீர் ஐ லவ் யூ என ரசிகை ஒருவர் பெயர் பலகை வைத்திருந்தார்.
  • அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அவர்களது அணியில் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த தொடரில் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் இணைந்துள்ளார். லக்னோ அணியின் முன்னாள் ஆலோசகராக இருந்த கம்பீருக்கு பதிலாக ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஜாகீர் கான் லக்னோ அணியில் இணைவதற்காக அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகை தந்தார். அப்போது ஹோட்டலில் ரசிகர்கள் கையில் பெயர் பலகையுடன் அவரை வரவேற்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஜாகீர்கானின் தீவிர ரசிகையும் இருந்தார்.

20 ஆண்டுகளுக்குப் முன்பு பெங்களூருவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடினர். அப்போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் ஜாகீர் ஐ லவ் யூ என பெயர் பலகை வைத்திருந்தார். அதனை மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

இதனை ஓய்வு அறையில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகையையும் ஜாகீர்கானை மாறி மாறி அந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர். உடனே ரசிகை ஜாகீர் கானை பார்த்து ஐ லவ் யூ என தெரிவித்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

இதனை பார்த்த யுவராஜ், ஜாகீர் கான் சிரித்தனர். யுவராஜ் உடனே நீங்களும் முத்தம் கொடுங்கள் என தெரிவிக்க ஜாகீர் கானும் சிரித்தபடி பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதற்கு ரசிகை வெட்கப்பட்டும் அவர் வைத்திருந்த பெயர் பலகையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொள்வார்.

இவர்கள் இரண்டு பேரும் செய்த செயலை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சேவாக் சிரித்தபடி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

அந்த ரசிகை அதே மாதிரி ஜாகீர் ஐ லவ் யூ என்ற பெயர் பலகையுடன் வெட்கத்தில் ஜாகீர் கானை பார்ப்பதும் அவரும் சிரித்தப்படி கடந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில் லக்னோ அணி இதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News