ஐபிஎல் 2025: போட்டிகளை காண இலவச பேருந்து பயணம்- சிஎஸ்கே ஏற்பாடு
- ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
- சிஎஸ்கே முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
மேலும், மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ், மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு, ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி, ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா, ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத், ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப், மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான் என 7 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த இலவச பயணம் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்க்குள் மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.