ஐ.பி.எல்.
ஐபிஎல் 2025: முதல் பாதி ஆட்டங்களை இழக்கும் பும்ரா- வெளியான தகவல்
- 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
- முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த தொடரின் முக்கிய அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த வகையில் அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளாரன பும்ரா தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோக செய்தியாகவும் சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.