எனது அணிக்காக நான் துணை நிற்பேன்- ஆர்சிபி கேப்டன் படிதார்
- நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன்.
- அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது. இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் எனது அணிக்காக நான் துணை நிற்பேன் என கேப்டன்சி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் மனம் திறந்த பேசினார். அதில், நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் போட்டிகளின் நிலவரங்களை உற்று நோக்குவேன். எனது அணிக்காக நான் துணை நிற்பது அவசியம். அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.
என ரஜத் படிதார் கூறினார்.