மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்
- முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 149 ரன்கள் எடுத்தது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார்.
மும்பை:
மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.
மரிசான் காப் கடைசி வரை போராடினார். அவர் 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.