ஐ.பி.எல்.
null

எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்.. 360 டிகிரியில் நடந்த மாற்றம்.. மனம் திறந்த பாண்ட்யா

Published On 2025-03-17 20:50 IST   |   Update On 2025-03-17 20:53:00 IST
  • எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை.
  • உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது.

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடரில் மும்பை அணிக்காக கோப்பையை வெல்ல புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருகிறார்.

5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்ட்யாவை குஜராத் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி தங்களது புதிய கேப்டனாக அறிவித்தது.

அதற்கு மும்பை ரசிகர்களே வான்கடே மைதானம் மட்டுமின்றி செல்லும் இடங்களில் எல்லாம் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.

இந்நிலையில் மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ஓடி ஒளியவில்லை என்றும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை வென்றதால் தற்போது அனைத்தும் 360 டிகிரியில் மாறியுள்ளதாகவும் பாண்டியா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

எனக்கு நடந்த விஷயம் போர்க்களத்தை விட்டு வெளியேறாதது பற்றியதாகும். அதில் நான் எப்படி உயிர் வாழ்ந்தேன் என்பதை பற்றி இருக்குமே தவிர வெற்றி பெறுவதைப் பற்றி இருக்காது. அந்த வருடம் நான் எனது நிலையை பிடித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த கடினமான காலத்திலும் கிரிக்கெட் மட்டுமே என்னுடைய நண்பனாக இருந்தது. என்னை அனைத்து சிக்கல்களில் இருந்தும் கிரிக்கெட் மட்டுமே வெளியேற்றியது.

எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை. கடந்த 6 மாதங்களில் உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது. அது எனக்கு 360 டிகிரியில் நடந்த மாற்றம் போல் இருக்கிறது.

என்னால் நிலைத்து நின்று கடினமாக உழைத்து போராடினால் கிரிக்கெட்டில் மீண்டும் வர முடியும் என்பது தெரியும். ஆனால் எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாத போது என்னுடைய வாழ்க்கையை கடவுள் வெறும் இரண்டரை மாதங்களில் ஸ்கிரிப்ட் எழுதி மாற்றினார்.

என்று பாண்ட்யா  கூறினார்.

Tags:    

Similar News