ஐசிசி தொடரில் அதிக விக்கெட்: ஜாகீர் கான் சாதனையை முறியடித்த ஷமி
- முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஐசிசி தொடரில் (ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) முகமது ஷமி 19 இன்னிங்சில் மொத்தம் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானை (32 இன்னிங்சில் 59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஷமி முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் (47 விக்கெட்), ஜடேஜா (43 விக்கெட்) ஆகியோர் இருக்கின்றனர்.