கிரிக்கெட் (Cricket)
null

சாம்பியன்ஸ் டிராபி: அதிவேகமாக 200 விக்கெட்டுகள் - சாதனை படைத்து அசத்திய முகமது சமி

Published On 2025-02-20 20:34 IST   |   Update On 2025-02-20 20:45:00 IST
  • வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
  • முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேலும், 49.4 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்தப் போட்டியில் விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை முகமது சமி படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய போது, முகமது சமி 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தனது 104-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முகமது சமி அஜித் அகார்கர் சாதனையை முறியடித்துள்ளார். அஜித் அகார்கர் 133 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

68 ரன்களை எடுத்திருந்த வங்காளதேசம் அணியின் ஜேகர் அலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முகமது சமியின் 200-வது விக்கெட்டாக மாறினார். சர்வேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முகமது சமி இரண்டாவது இடத்தில் உள்ளார். 102 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார்.

பந்துகள் அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முகமது சமி உருவெடுத்துள்ளார். இவர் தனது 5,126-வது பந்தில் 200 விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 5240 பந்துகளை வீசி இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். 

Tags:    

Similar News