சுப்மன் கில் இல்லை.. ரோகித் சர்மாவுக்கு அடுத்து இவர்தான் கேப்டன் - வெளியான தகவல்
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாக தகவல் வெளியாகியது.
மும்பை:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது வந்தது. இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாகவும், அதனை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சாம்பியன் டிராபியை இந்தியா வெல்லவில்லை எனில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.