கிரிக்கெட் (Cricket)

ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்.. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 73 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா

Published On 2025-02-07 20:46 IST   |   Update On 2025-02-07 20:46:00 IST
  • ஆஸ்திரேலியா 2-ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது.
  • அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

காலே:

இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹேட் 21, கவாஜா 36, லெபுசென் 4 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 2-ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தற்போது வரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News