கிரிக்கெட் (Cricket)

21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய சாதனைப் படைத்த பாகிஸ்தான்

Published On 2024-12-20 16:20 GMT   |   Update On 2024-12-20 16:20 GMT
  • தொடர்ச்சியாக ஐந்து தொடர்களை வென்றுள்ளது.
  • தென்ஆப்பிரிக்கா மண்ணில் 2000-த்திற்குப் பிறகு மூன்று தொடர்களை வென்றுள்ளது.

பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் 21-ம் நூற்றாண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3 தொடர்களை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்த சீசனில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கைப்பற்றிய 3-வது தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.

இது ஒரு அணி விளையாட்டு. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அனைத்து வீரர்களும், ஈடுபாடுடன் பங்களிக்கின்றனர் என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளா். பாபர் அசாம் 73 ரன்களும், ரிஸ்வான் 80 ரன்களும் விளாசி அணி 329 ரன்கள் குவிக்க உதவி புரிந்தனர்.

330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 248 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

Tags:    

Similar News