ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை விட பாகிஸ்தானுக்குதான் அதிக ஆதாயம் என்கிறார் மியான்டட்
- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன்.
- இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் வரமாட்டோம் என்ற தெளிவான தகவலை அனுப்பியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பொதுவான ஒரு இடத்தில் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் உள்பட இந்தியா விளையாடம் போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2027 வரையிலான போட்டியில் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடாது.
இந்த முடிவால் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குதான் அதிக ஆதாயம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜாவித் மியான்தத் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன். ஐசிசி மற்றும் பிற கிரிக்கெட் நாடுகள் மத்தியில் அவசரப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பிசிசிஐ-யை விட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிக லாபம் ஈட்டியதாக நான் நினைக்கும் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்தது.
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மிகப்பெரிய தொடரை நடத்த இருக்கிறது. நீங்கள் (இந்திய அணி) பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.
இவ்வாறு மியான்டட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மேலும் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அது சிறந்த செய்தியாக இருக்கும் என மொயின் கான் தெரிவித்துள்ளார்.