ஜாகீர் கான் போலவே பந்துவீசும் சிறுமி- வீடியோவை பகிர்ந்து சச்சின் பாராட்டு
- ஜாகீர் கான் 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
- ஒரு சிறுமி பந்து வீசும் வீடியோ ஒன்றை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரும், மிகச்சிறந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளருமான ஜாகீர்கான் (37) சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2015-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு சிறுமி பந்து வீசும் வீடியோ ஒன்றை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.
அதில் ஜாகீர் கானை போன்று ஒரு சிறுமி பந்து வீசுவதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். மிருதுவானது, சிரமமற்றது, பார்ப்பதற்கு அழகானது. சுசீலா மீனாவின் பந்துவீச்சு உங்களது சாயலாக இருக்கிறது என கூறிய சச்சின், ஜாகீர் கானை டேக் செய்து, நீங்களும் இதை பார்த்தீர்களா என கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.